ராமநாதபுரம் மாதாந்திர நகராட்சி கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் நகராட்சி மாதந்திர சாதரண கூட்டத்தில் பொதுமக்களுக்கான அடிப்படை உள்ளிட்ட அனைத்து வசிதிகள் செய்திட வேண்டும் உள்ளிட்ட 67 தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ராமநாதபுரம் நகராட்சி மாதந்திர சாதரண கூட்டம் நகர் மன்ற கூட்டரங்களில் திங்கட்கிழமை நடைபெற்றது. நகராட்சி தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரவீன்தங்கம்,ஆணையர் அஜிதா பர்வீன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில்,நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை கழிவு தேங்குவதை தடுக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கிட வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் விட வேண்டும் என உறுப்பினர் கேட்டுக்கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 67 தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
Next Story





