ராமநாதபுரம் தென் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கு சுதந்திர போராட்ட தியாகி மன்னார் ரிபெல் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி பெயர் சூட்ட கோரி தென் தமிழர் கட்சியினர் மன்னார் வேடமணிந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு திங்கட்கிழமை அளித்தனர். ராமநாதபுரத்தில் 20 கோடி மதிப்பிட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி தொடங்கி நிறைவடையும் நிலையில் உள்ளது. புதிய பேருந்து நிலையத்திற்கு ரிபெல் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி பெயர் சூட்டக்கோரி தென் தமிழர் கட்சி சார்பில் மன்னர் வேடமணிந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனைதொடர்ந்து, இதே கோரிக்கையை வலியுருத்தி மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், தென் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி தலைமை வகித்தார்.நெல்லை பொறுப்பாளர் பாண்டி,பொருளாளர் பா.ராஜேந்திரன், தாய்தமிழ் கட்சி பாண்டியன்,வைகை பாசன விவசாய சங்க மதுரைவீரன்,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Next Story



