அரக்கோணம் அரசு கல்லூரியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு!

X
அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சு.ரவி எம்.எல்.ஏ.திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லூரி முதல்வர் இல்லை. கல்லூரியில் ஆய்வு செய்தபின் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, 2 வருடங்களுக்கு முன்பு கூடுதல் ஆய்வுக்கூடம் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. கடந்த மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்த புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தில் தண்ணீர் மற்றும் பிற வசதிகள் ஏதும் முறையாக செய்யப்படவில்லை. படிப்பை முடித்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு வருடத்துக்கு மேலாகியும் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படவில்லை. 4 ஆண்டுகளாக மாணவர்களுக்குபட்டமளிப்பு விழாவும் நடத்தப்படவில்லை.4ஆண்டுகளில் இக்கல்லூரியில் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே போகிறது. கல்லூரியில் 52 பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் செயல்பட்டு வருகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் கல் லூரியின் முன்பு அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.
Next Story

