அனுமதி இன்றி செயல்பட்ட மணல் தொழிற்சாலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

X
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் முறையான அனுமதியின்றி கல் குவாரிகள், மணல் தொழிற்சாலைகள் செயல்படுவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து புவியியல், சுரங்கத்துறை உதவி இயக்குனர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து பாளையம் பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட போது பாலகிருஷ்ணன் என்பவரது நிலத்தில் இருந்து செம்மண்ணை அனுமதியின்றி எடுத்து அதை சுத்தப்படுத்தி ஆற்று மணல் போல மாற்றும் ஆலை செயல்பட்டது தெரிந்தது. இதையடுத்து தொழிற்சாலைக்கு சீல் வைத்த அதிகாரிகள் இயந்திரங்கள், 4 யூனிட் மணலை கைப்பற்றினர். மேலும் பாலகிருஷ்ணன், இயந்திர ஆப்பரேட்டர் தென்னம்பட்டியைச் சேர்ந்த பழனி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

