எஸ்.பி., அலுவலகத்தில் த.வெ.க., வினர் புகார்

X
கள்ளக்குறிச்சியில் தி.மு.க., வினரை தாக்கியதாக, த.வெ.க., கிழக்கு மாவட்ட செயலாளர் பரணிபாலாஜி தலைமையில், அக்கட்சியினர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தலைவர் விஜய் பிறந்த நாளையொட்டி உளுந்துார்பேட்டை அடுத்த காட்டுசெல்லுார் கிராமத்தில் நிர்வாகிகள் ஜெயமணி, சரவணன், செந்தில்முருகன் ஆகியோர் பேனர் கட்டினர். அப்போது, உளுந்துார்பேட்டை தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜவேல் மகன் பிரபாகரன், ஆதரவாளர்கள் 10 பேருடன் வந்து, கிழித்து மூவரையும் தாக்கினர். காயமடைந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே த.வெ.க, நிர்வாகிகள் மீது, ராஜவேல் துாண்டுதலில் அவரது டிரைவர் மூலம் போலீசில் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி, தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. மனு அளிக்கும் போது, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், கிழக்கு மாவட்ட இணை செயலாளர் மோகன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story

