கருர்-ஆடு மேய்த்த மூதாட்டியிடம் தாலி கொடியை பறித்த இளைஞர் கைது.

கருர்-ஆடு மேய்த்த மூதாட்டியிடம் தாலி கொடியை பறித்த இளைஞர் கைது.
கருர்-ஆடு மேய்த்த மூதாட்டியிடம் தாலி கொடியை பறித்த இளைஞர் கைது. கரூர் மாவட்டம், லாலாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலதாளியாம்பட்டி சண்முகம் என்பவரது தோட்டம் அருகே ஜூன் 21 ஆம்ம் தேதி மதியம் ஆடு மேய்த்து கொண்டிருந்த மேல தாளியாம்பட்டியை சேர்ந்த துரைராஜ் மனைவி லட்சுமி வயது 60 என்பவரை அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத நபர் கை மற்றும் கால்களை துணியால் கட்டி அவர் அணிந்திருந்த மஞ்சள் தாலி கயிற்றில் இருந்த ரூபாய் 60,000/- மதிப்புள்ள சுமார் 1 ¼ சவரன் தாலி, குண்டு மற்றும் தங்க குழல் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவு படி குளித்தலை DSP செந்தில்குமார் தலைமையில் லாலாபேட்டை காவல் ஆய்வாளர் புஷ்பகனி, S.I.உதயகுமார் , குற்றப்பிரிவு தனிப்படையினர் அடங்கிய குழுவினர்,ஜூன் 23ல் சம்பவம் நடந்த அன்று சுற்றித் திரிந்தவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டதில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகன்டண் 22 என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஆடு மேய்த்து கொண்டிருந்த லட்சுமியிடம் நகைகளை கொள்ளையடித்தாக ஒப்புக்கொண்டதால்,அவரை கைது செய்து வீட்டில் வைத்திருந்த சுமார் 1 ¼ சவரன் தாலி, குண்டு மற்றும் தங்க குழல் ஆகியவற்றை கைப்பற்றி குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவல் அடைப்பு பெற்று குளித்தலை கிறைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொள்ளை சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ததால் DSP செந்தில்குமார், தலைமையிலான தனிப்படையினரை கரூர் மாவட்ட S.P. பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Next Story