திமுக கொடி கம்பத்தை அகற்றிய நெடுஞ்சாலை துறையினர்.
திமுக கொடி கம்பத்தை அகற்றிய நெடுஞ்சாலை துறையினர். அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் பொது மக்களுக்கு இடையூறாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருக்கும் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணி மலை அருகே உள்ள பொன் நகரில் சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த திமுக கொடி கம்பத்தை நெடுஞ்சாலை துறையினர் தானியங்கி இயந்திரம் உதவியுடன் இன்று அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கம்பத்தை அகற்றும் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 அடி உயரம் கொண்ட சொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story







