நின்றிருந்த கனரக வாகனத்தின் மீது மோதிய டிப்பர் லாரி
திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த கனரக வாகனத்தின் மீது மோதி சிக்கிக்கொண்ட டிப்பர் லாரி டிரைவர்.3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள் . திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பொன்பாடி சோதனை சாவடி அருகே சாலை ஓரத்தில் இன்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று நின்றிருந்தது. ஆந்திராவில் இருந்து கிராவல் நிரப்பிக்கொண்டு அதிவேகமாக திருத்தணி நோக்கி வந்த டிப்பர் லாரி கனரக வாகனத்தின் மீது மோதிமது. விபத்தில் டிப்பர் லாரியின் இன்ஜின் பகுதி நொறுங்கியது இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் அருள் (40) என்பவர் சிக்கிக்கொண்டார். வெளியில் வர முடியாத வகையில் கை கால்கள் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினார். சுமார் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு திருத்தணி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று டிரைவர் சீட்டில் சீக்கி போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக பயணித்து வருவதால், அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருவதாகவும் லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story







