வெங்கமேடு நான்கு ரோட்டில் டூவீலர்கள் மோதல். இளம் பெண் படுகாயம்.
வெங்கமேடு நான்கு ரோட்டில் டூவீலர்கள் மோதல். இளம் பெண் படுகாயம். நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேலப்பட்ட பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் வயது 45 இவரது மனைவி லாவண்யா வயது 30. இவர்கள் இருவரும் ஜூன் 22 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் வெங்கமேடு கொங்கு நகர் நான்கு ரோடு பகுதியில் டூவீலரில் வந்தபோது , வெங்கமேடு திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் வயது 68 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் குணசேகரன் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த லாவன்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக குணசேகரன் அளித்த புகாரில்,விபத்து ஏற்படுத்திய பன்னீர்செல்வம் மீதுவழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story




