நெரூரில் சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது. மது பாட்டில்கள் பறிமுதல்.
நெரூரில் சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது. மது பாட்டில்கள் பறிமுதல். வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரூர் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து எஸ்ஐ செந்திலுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூன் 23ஆம் தேதி காலை 9 மணி அளவில் , நெரூர் வடக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள அணுகுண்டு பெரியசாமி தோட்டம் அருகே மது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டு , இந்த விற்பனையில் ஈடுபட்ட நெரூர் காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாயவன் வயது 53 என்பவரை கைது செய்து , அவர் விற்பனைக்கு வைத்திருந்த 26 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மாயவன் மீது வழக்கு பதிவு செய்து பின்னர் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story




