புளியங்குடி நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது

புளியங்குடி நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது
X
நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம்- புளியங்குடி 33 வார்டு கொண்ட நகராட்சியில் 24 நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தாமிரபரணி குடிநீர், தார் சாலை, தெருவிளக்கு, வாருகால் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தலைமை நகர் மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன், துணைத் தலைவர் ஆ.அந்தோணிசாமி முன்னிலையில் 48 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் 4-வது வார்டு உறுப்பினர், நகர் மன்ற துணைத் தலைவர் கூறும் போது புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம் பொதுமக்களின் நலன் கருதி 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் பொது மக்களுக்கு அன்றாட தேவையான குடிதண்ணீர் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் வரும்2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் தண்ணீர் வழங்குவதில் தட்டுப்பாடு இன்றி குடிதண்ணீர் வழங்க வேண்டும் மேற்கு தொடர்ச்சி மலை கோட்டமலை ஆற்றின் குடிதண்ணீர் பம்பிங் செய்து தனிநபர் தீர்மானம் பராமரிப்பு செய்திட வேண்டும் இல்லை என்றால் வேறு நபருக்கு காண்ட்ராக்டை மாற்றி அமைத்து புளியங்குடி சிந்தாமணி ஆகிய 33 வார்டு பகுதிக்கும் தண்ணீர் சப்ளை செய்து தர வேண்டி கோரிக்கையாக வலியுறுத்தினார் மேலும் நகராட்சி கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் வள்ளி அண்ணாமலை, நகராட்சி கமிஷனர் ஷியோன் கிங்டோன், சுகாதார ஆய்வாளர் முருகன், வீரமணி, நகராட்சி அலுவலர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story