அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபர் கைது.

அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபர் கைது.
அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபர் கைது. கரூர் மாவட்டம் மன்மங்கலம் சமத்துவபுரம் காந்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி கவிதா வயது 33.பட்டப்படிப்பு முடித்து தற்போதுதனியார் டெக்ஸ் நிறுவனத்தில் டைலராக வேலை பார்த்து வருகிறார். இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் , பரமத்தி வேலூர் , சந்தை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சந்தித்து தான் சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருவதாக கூறினார்.மேலும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதனை நம்பி கவிதா பல கட்டங்களாக ரூ 10 லட்சம் வரை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட ராஜேந்திரன் வேலைவாங்கி தராமல் சாக்கு போக்கு சொல்லி வந்துள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த கவிதா வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது வேலூரிலும் பல நபர்களிடம் இது போல 30 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.
Next Story