வேலாயுதம்பாளையத்தில் சட்ட விரோத புகையிலை விற்பனை. மூவர் கைது.
வேலாயுதம்பாளையத்தில் சட்ட விரோத புகையிலை விற்பனை. மூவர் கைது. வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர்கள் சுபாஷினி மற்றும் மனோகரன் ஆகியோருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஜூன் 23ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதம்பாளையத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜு என்பவரது கடையில் சோதனை மேற்கொண்ட போது தடை செய்த ஹான்ஸ் புகையிலை விற்பது தெரியவந்தது. இதே போல மலை வீதி ரவுண்டான பகுதியில் டீக்கடை நடத்தி வரும் நாமக்கல் மாவட்டம் , மோகனூர் சேர்ந்த ரமேஷ் என்பவரது கடையிலும் தடை செய்த ஹான்ஸ் மற்றும் கூல் லிப் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதேபோல வேலாயுதம்பாளையம் - கரூர் பைபாஸ் சாலையில் டீக்கடை நடத்தி வந்த விஜயகுமார் என்பவர் கடையிலும் தடை செய்த ஹான்ஸ் புகையிலை விற்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மூவரையும் கைது செய்து , அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Next Story




