அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரம்

X
Komarapalayam King 24x7 |24 Jun 2025 7:11 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் 2025-2026ம் ஆண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவில், சேர விரும்பும் மாணவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கல்லூரி குறியீட்டு எண்: 1031013. கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளில் எம்.ஏ. தமிழ் 36 இடங்கள், எம்.ஏ. ஆங்கிலம் 36 இடங்கள், எம்.காம் 36 இடங்கள், எம்.எஸ்.சி. கணிதம் 36 இடங்கள், எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 30 இடங்கள், உள்ளன. விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 15.07.2025. மேலும் தகவல்களுக்கு இக்கல்லூரி இணையதளம் www.gasckpm.org மற்றும் கல்லூரியில் செயல்பட்டு வரும், மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகவும். மேலும் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு தொடர்ந்து சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில்,இக்கல்லூரிக்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்து, இடம் கிடைக்காத மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் உடனே வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெறலாம் என கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தெரிவித்துள்ளார்.
Next Story
