திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

X
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், திருநங்கைகள் நல வாரிய அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை, சொந்தமாக சுயத்தொழில் தொடங்குவதற்கான மானியம் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 165 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். இம்முகாமில், 20 நபர்களுக்கு திருநங்கை தேசிய அடையாள அட்டைகளையும், 1 நபருக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினையும், 24 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 26 நபர்களுக்கு தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய அட்டை என மொத்தம் 71 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி திலகம், திருநங்கைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

