இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்கள்.

X
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்உலக குருதிக்கொடையாளர்கள் தினம்-2025 - ஐ முன்னிட்டு, தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட இரத்த தான முகாம்களில் அதிக முறை இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெயசீலன் பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்கள். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, இராஜபாளையம் ஆகிய அரசு இரத்த வங்கிகளுக்கு, வருடத்திற்கு 3 முறைக்கு அதிகமாக குருதி வழங்கிய 66 கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
Next Story

