ரேஷன் கடையில் அரிசி வாங்க வந்தவரிடம் அரிசி இல்லை என அனுப்பிவிட்ட சிறிது நேரத்தில் அரிசி வழங்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததால் பயனாளர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதம்

X
சிவகாசி அருகே ரேஷன் கடையில் அரிசி வாங்க வந்தவரிடம் அரிசி இல்லை என அனுப்பிவிட்ட சிறிது நேரத்தில் அரிசி வழங்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததால் பயனாளர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ..... சிவகாசி அருகே வடமலாபுரம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது விற்பனையாளர் சுபாஷ் அரிசி இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அரிசி முட்டை முட்டையாக இருந்ததை கண்டு அரிசியை வைத்துக் கொண்டே ஏன் இல்லை கூறிகிறீர்கள் என அப்பெண் கேள்வி எழுப்ப நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் அளித்து அரிசி இல்லை என அவரை கடையிலிருந்து அனுப்பி வைத்துள்ளார். அவர் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் அவரது ரேஷன் அட்டை கணக்கில் 16 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளதாக ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவரின் செல்போனிற்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அரிசி இல்லை என கூறிவிட்டு தற்போது அரிசி வழங்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் எப்படி அனுப்பப்பட்டது எனவும் அரிசி வழங்கப்பட்டதாக கூறி கள்ளச் சந்தையில் விற்பனை செய்கிறீர்களா என விற்பனையாளரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நிலைகுலைந்து போன விற்பனையாளர் அவர்களது கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் விற்பனையாளர் சுபாஷ் தனது ரேஷன் அட்டையை பயன்படுத்தி அரிசி வழங்க முன் வந்தார். ஆனாலும் அரிசியை வாங்க மறுத்த பயனாளி அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிவகாசி வட்டார வளங்கள் அலுவலர் கோதண்டராமனிடம் கேட்டபோது, நடந்த நிகழ்வு குறித்து ஆய்வு நடத்தி மாவட்ட வழங்கள் அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும், மாவட்ட வழங்கள் அலுவலர் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story

