ராணிப்பேட்டை அருகே காலி குடங்களுடன் மக்கள் திடீர் சாலை மறியல்

X
ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் தெரு அம்பிகா தெரு மற்றும் நடுத்தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு இணைக்கப்பட்ட குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனை தொடர்ந்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் ராணிப்பேட்டை தெங்கால் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
Next Story

