இலங்கைக்கு கடத்தல் இருந்த பீடிஇலை பண்டல்பறிமுதல்

X
ஆறுமுகநேரி அருகே இருந்து கடல் பகுதி வழியாக இலங்கைக்கு படகுமூலம் கடத்தப்பட இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 3,300 கிலோ பீடி இலைகள் பறிமுதல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர், ஈச்சர் லாரி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த க்யூபிரிவு காவல்துறையினர் தப்பி ஒட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே இருந்து கடல் பகுதி வழியாக இலங்கைக்கு படகுமூலம் கடத்தப்பட இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 3,300 கிலோ பீடி இலைகள் பறிமுதல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர், ஈச்சர் லாரி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த க்யூபிரிவு காவல்துறையினர் தப்பி ஓடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர் தூத்துக்குடி கடற் பகுதி வழியாக இலங்கைக்கு தொடர்ந்து பீடி இலைகள், மஞ்சள், மாத்திரைகள், மற்றும் அழகு சாதன பொருள் பல்வேறு விதமான பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது இதை தடுக்கும் பணியில் க்யூப் பிரிவு காவல் துறையினர் மற்றும் கடலோர காவல் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள கோட்டை மலை காட்டுப்பகுதி வழியாக கொம்புத்துறை கடற்கரை பகுதியில் இருந்து படகுமூலம் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது இதைத்தொடர்ந்து ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான க்யூப் பிரிவு காவல் துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர் அப்போது இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக அங்கே ஈச்சர் லாரியில் இருந்த 103 பண்டல்களில் பார்சல் செய்யப்பட்டு கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 3300 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது இதைத்தொடர்ந்து கியூ பிரிவு காவல் துறையினர் கடத்தப்பட இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 103 பண்டல்களில் பார்சல் செய்யப்பட்டு இருந்த 3300 கிலோ பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பிச்சர் லாரி டிராக்டர் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் தப்பி ஓடிய கடத்தலில் தொடர்புடைய கும்பலை கியூ பிரிவு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Next Story

