அரசு அனுமதியின்றி லாரியில் மண் திருடிய நபரை கைது

அரசு அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்தது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரியிடமிருந்து *6 யுனிட் கிராவல் மண் மற்றும் லாரி ஆகியவற்றை பறிமுதல்
அரசு அனுமதியின்றி லாரியில் மண் திருடிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் உட்கோட்டம் மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட செங்குணம் பகுதியில் கிராவல் மண் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி மருவத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.குருநாதன் மற்றும் அவரது குழுவினர் அப்பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்ட போது அவ்வழியாக வந்த லாரியை பிடித்து விசாரணை செய்ததில்
1.ராஜா (45) த/பெ குருணாசாமி, மாரியம்மன் கோவில் தெரு, எளம்பலூர், பெரம்பலூர்.
என்பவர் அரசு அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்தது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரியிடமிருந்து 6 யுனிட் கிராவல் மண் மற்றும் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த மருவத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் மேற்படி எதிரியை இன்று 24.06.2025 - ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story