கோவையில் சிலை சேதம்: பீகார் வாலிபர் கைது !

கோவையில் சிலை சேதம்: பீகார் வாலிபர் கைது !
X
சின்னியம்பாளையம் மற்றும் மயிலம்பட்டி சாலையில் உள்ள கோவில்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் பீகார் வாலிபர் கைது.
கோவை சூலூர் அருகே உள்ள சின்னியம்பாளையம் மற்றும் மயிலம்பட்டி சாலையில் உள்ள கோவில்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கரண் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஸ்ரீ பிளாக் மாரியம்மன் கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டு, கருப்பராயன் கோவிலில் சிலைகள் சேதமடைந்ததுடன், ஒரு சிலை காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்து, உடனடி நடவடிக்கை கோரினர். சூலூர் போலீசார் சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னல்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு கரண் குமாரை கைது செய்தனர். அவர் குடிபோதையில் தண்ணீர் இல்லாத கோபத்தில் சிலைகளை சேதப்படுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Next Story