கோவை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர் கைது !

கோவை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர் கைது !
X
கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர் கைது.
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி, கோவில்பாளையம் பகுதியில் சித்தார்த் @ புலு சுனா (31) என்ற வட மாநில வாலிபரிடமிருந்து நேற்று 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Next Story