தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட செயற்குழுவில்

X
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட செயற்குழு, சங்க அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன், நடந்துள்ள வேலைகள் குறித்து அறிக்கையை சமர்ப்பித்தார். நாகை, கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் ஆகிய வட்ட நிர்வாகிகள் சார்பில் விவாதம் நடைபெற்றது. வருகிற ஜூலை 9-ம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை ஊழியர்களும் பங்கேற்பது என்றும், வருகிற ஜூலை 2 அன்று கடந்த 2003-ல் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க வேலைநிறுத்தத்தை நினைவுகூறும் எழுச்சிநாள் கருத்தரங்கத்தை சிறப்பாக நடத்துவது என்றும், அன்றைய தினம் முழு உடல்தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்தை நாகை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுநாள் வரை மாவட்டச் செயலாளராக செயல்பட்ட ஏ.டி.அன்பழகன் அரசுப் பணியை நிறைவு செய்ததால், வேளாண்மைத் துறையில் பணிபுரியும் த.ஸ்ரீதர் புதிய மாவட்டச் செயலாளராகவும், சத்துணவுத் துறையைச் சார்ந்த கே.பாலாம்பாள் மாவட்ட துணைத் தலைவராகவும், நாகை வட்டத் தலைவர் கே.ரவிச்சந்திரன் மாநில செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலாளர் சு.வளர்மாலா சிறப்புரையாற்றினார். முடிவில், மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல் நன்றி கூறினார்.
Next Story

