பூ செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது

பூ செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது
X
கொடைரோடு அருகே மாவூத்தன் பட்டியில் பூ செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மாவூத்தன் பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து நாகராஜ் என்பவரின் தோட்டத்திற்கு சென்ற குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அங்கு சோதனையிட்டபோது பூச்செடி மற்றும் தென்னை மரங்களுக்கு நடுவே கஞ்சா செடி மரம் போல் வளர்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதேபோல் இரண்டு மூன்று இடங்களில் ஆங்காங்கே கஞ்சா செடிகள் வளர்ந்து இருந்தது கண்டு அவைகளை வேரோடு பறித்தனர் பின்னர் விவசாயி நாகராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தானே தனது தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது இதனைத் தொடர்ந்து தோட்டத்தில் இருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றி அழித்த போலீசார் கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி நாகராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story