நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல்

புதிய மாவட்ட தலைவராக 3-வது முறையாக நோய் தடுப்பு மருந்து துறை ஊழியர் தேர்வு
நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் நாகப்பட்டினம் மாவட்ட மையம் 2025-2028-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலச் செயலாளர் வ.கோவிந்தசாமி தேர்தல் அலுவலராக செயல்பட்டார், தேர்தலில், புதிய மாவட்ட தலைவராக மூன்றாவது முறையாக ஒரு மனதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையை சார்ந்த சு.மோகன் தேர்வு செய்யப்பட்டார், மேலும், மாவட்ட செயலாளராக ப.மாதா செல்வன், பொருளாளராக மு.சுத்தானந்த கணேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்,
Next Story