கோவையில் இருசக்கர வாகன திருட்டு: இரண்டு வாகனங்கள் பறிமுதல்

X
கோவை பேரூரில் இரவு ரோந்தில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கு இடமளித்த வகையில் பயணித்த இருசக்கர வாகனத்தை தடுத்து போலீசார் சோதனை செய்தனர். விசாரணையில், அந்த நபர் இளங்கோவன் என்பதும், அவர் திருடியதாக கூறப்படும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இளங்கோவன்மீது வழக்கு பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் நேற்று அடைத்த போலீசார், மேலும் தொடர்புடையோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

