பாவூர்சத்திரம் காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

பாவூர்சத்திரம் காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
X
காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள மருதடியூர் காளியம்மன் கோவில் கொடை விழா தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று காலை குற்றாலத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நள்ளிரவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story