அரக்கோணம்: தள்ளுவண்டி மீது லாரி மோதி விபத்து!

X
சோளிங்கர் தனியார் தொழிற்சாலையில் இருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு அரக்கோணம் நோக்கி வந்த லாரி அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டு பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தள்ளு வண்டி ஜூஸ் கடை மற்றும் ஜூஸ் குடிக்க வந்த நபர், அவரது மோட் டார் சைக்கிள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. லாரி மோதிய வேகத்தில் தள்ளு வண்டியில் இருந்த பழங்கள் மற் றும் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டது. இதில் தள்ளு வண்டி முற்றிலுமாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக தள்ளு வண்டியில் ஜூஸ் கடை நடத்தி வந்த வடமாநில நபர் மற்றும் ஜூஸ் குடிக்க வந்த நபர் என 2 பேர் சிறு காயங்களுடன் தப்பித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோ ணம் டவுன் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், தூக்க கலக்கத்தில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
Next Story

