பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்
X
திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
மார்த்திப்பாளையம் பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) ஜூன் 28, 30 ம் தேதிகளில் ஈரோடு- கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி – கரூர் இடையே மட்டுமே இயங்கும். இதேபோல திருச்சி-பாலக்காடு ரயிலானது (16843) வருகிற 28, 30-ம் தேதிகளில் பாலக்காடு – கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் இந்த ரயிலானது கரூர் -பாலக்காடு இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும். மேலும், பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வருகிற 27, 28, 30-ம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். மறுமார்க்கமாக, மயிலாடுதுறை – செங்கோட்டை ரயிலானது (16847) வரும் 29-ம் தேதி மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களைத் தவிர்த்து, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி-சார்லபள்ளி கோடைகால சிறப்பு ரயிலானது (07229) வரும் 27-ம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி-ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 28 ம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்
Next Story