விழுப்புரம்- புதுச்சேரி ரயில்கள் ரத்து

விழுப்புரம்- புதுச்சேரி ரயில்கள் ரத்து
X
திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரெயில் 4 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரெயில் (வண்டி எண் 66063), புதுச்சேரியில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 66064) ஆகிய 2 ரெயில்களும் 26-06-2025, 27-06-2025 (வியாழன், வெள்ளி) மற்றும் 28, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.மேலும் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் எழும்பூர்-புதுச்சேரி பயணிகள் ரெயில் (வண்டி எண் 66051), வருகிற 29-ந் தேதி மட்டும் வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் சுமார் 60 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story