ஆகாச கழனியப்பர் அய்யனார் கோவில் வைகாசி திருவிழா
நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா நத்தப்பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட செம்பியவேளூரில், ஸ்ரீ பூர்ணாம்பிகா புஷ்களாம்பிகா சமேத ஆகாச கழனியப்பர் அய்யனார் கோவில் வைகாசி திருவிழா கடந்த 10-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சுவாமி வீதி உலா மற்றும் காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து, நேற்று சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு திரையிசை தெம்மாங்கு பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



