ராமநாதபுரம் லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை அதிகாரி கைது
ராமநாதபுரம் வடக்குமீன்வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் நேற்று தொண்டி அருகே சீனா இன்ஜின் பயன்படுத்தியதாக மூன்று இன்ஜின்களை பறிமுதல் செய்த நிலையில் படகு உரிமையாளரிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததையடுத்து, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து ஆய்வாளர் சகுபர் சாதிக்கிடம் சோதனை நடத்தினர் அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் லஞ்ச பணம் இருந்ததாக தெரிகிறது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போலீசார் நடத்திய சோதனையில் சகுபர் சாதிக்கிடமிருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மீனவர்களுக்கு வழங்கி உள்ளனர் இதில் மீனவர்களிடமும் படகு உரிமையாளரிடமும் லஞ்சப்பணம் பெற்றதாக மீனவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்த நிலையில் தற்போது லஞ்சப்பணம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் மாவட்டம் முழுவதும் அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர், ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதிகாரியாக வந்ததிலிருந்து பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பிடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது பொதுமக்கள் மத்தியில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மரியாதை அதிகரித்து வரைவது வரவேற்கத்தக்கது
Next Story



