ராமநாதபுரம் அமைச்சர் ஆய்வு

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாக்குவெட்டி பகுதியில் நடந்து வரும் வரத்து கால்வாய் மற்றும் மதகுகள் மராமத்து பணிகளை வனத்துறை மற்றும் கதர்கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது: விவசாயத்திற்கு தனிபட்ஜெட் அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதுகுளத்கதூர் தொகுதி பாசன வசதிக்காக ரூ.67கோடி 56 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். அதன்படி முதற்கட்டமாக ரூ.15கோடியே 56 லட்சம் மதிப்பில் குண்டாறு, ரெகுநாதகாவிரி வரத்து கால்வாய், மதகுகள், பாலங்கள் என மராமத்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் கமுதி,முதுகுளத்தூர்,கடலாடி ஆகிய 3 ஒன்றியங்களில் பசும்பொன் முதல் ஆப்பனூர் வரையிலும், முதுகுளத்தூர் முதல் சிக்கல் மற்றும் களரி வரையிலும் உள்ள 44 பொதுப்பணித்துறை கண்மாய்கள், 27 ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள் மற்றும் சிறுகண்மாய்கள் பாசன வசதி பெறும். இதபோல ரூ.17கோடியில் பரளையாறு மற்றும் ரூ.35கோடியில் கஞ்சம்பட்டி ஓடை கால்வாய் மராமத்து பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க உள்ளது. இதன் முலம் முதுகுளத்தூர் தொகுதியில் சுமார் 131 பெரிய கண்மாய்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட சிறு கண்மாய்கள் முழு பாசன வசதி பெறும், இதனால் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் விவசாயம் நிலங்கள் பயனடையும். மேலும் மழைக்காலத்தில் போக்குவரத்து வசதிக்காக பாக்குவெட்டி பாலம் அருகே செல்லும் கமுதி & முதுகுளத்தூர் சாலையில் மாநில நெடுஞ்சாலை மூலம் ரூ.18கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இது போன்ற திட்டங்களால் முதுகுளத்தூர் தொகுதியில் மட்டும் ரூ.1,200கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
Next Story

