ராமநாதபுரம் விவசாயிகள் போராட்டம்

ராமநாதபுரம் விவசாயிகள் போராட்டம்
X
கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர செயலாளர் வேண்டி விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்.
ராமநாதபுரம் மாவட்டம் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர செயலாளர் நியமனம் செய்ய வேண்டும், கூட்டுறவு வங்கிகளை முறையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் வண்டிக்கார தெரு பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் காவிரி வைகை கிருதுமால் பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது, இதில் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கணக்காணோர் கலந்து கொண்டு முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர், இதனைத்தொடர்ந்து துணை பதிவாளர் அலுவலகத்திற்கு விவசாய சங்க நிர்வாகிகள் சென்று தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
Next Story