ராமநாதபுரம் மாநில அளவிலான விளையாட்டு போட்டி துவக்கம்

ராமநாதபுரம் மாநில அளவிலான விளையாட்டு போட்டி துவக்கம்
X
மாநில அளவிலான வேளாண் பல்கலை கழக விளையாட்டு போட்டிகள், 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு, பிரம்மாண்டமாக அமைச்சருக்கு வரவேற்பு அளித்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் கிரிக்கெட் விளையாடி போட்டிகளை துவங்கி வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி யில் மாநில அளவிலான வேளாண் கல்லூரிகளுக்கு இடையே ஆன மூன்றாம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கியது. தமிழ்நாடு அளவில் வேளாண் அறிவியல் கல்லூரிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட வேளாண் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு ஒலிம்பிக் அணிவகுப்பு நடத்தினர். இந்நிகழ்ச்சியை வனத்துறை மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சர் திரு.R.S.ராஜ கண்ணப்பன் ஒலிம்பிக் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கிரிக்கெட் விளையாடி கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தார் விழாவிற்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பனை பிரம்மாண்டமாககேரள செண்டை மேளம் முழங்க வரவேற்று மாணவ, மாணவர்கள் புலியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம் ஆடி வரவேற்றனர். வாலிபால், கிரிக்கெட் பேட்மிட்டன், இறகுபந்து, கபடி, கோகோ, கால்பந்து, கேரம், செஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நான்கு நாட்களாக நடைபெற உள்ளது இந்த போட்டியை 1200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
Next Story