ராமநாதபுரம் வருவாய் துறை சங்கங்கள் போராட்டம் நடைபெற்றது

வருவாய் துறை சங்கங்களின் சார்பில் 7 அம்ச கோரிக்கையான வருவாய் துறையினருக்கு பணி பாதுகாப்பு தனி சட்டம் ஏற்றப்பட வேண்டும் போராட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறை சங்கங்களின் சார்பில் 7 அம்ச கோரிக்கையான வருவாய் துறையினருக்கு பணி பாதுகாப்பு தனி சட்டம் ஏற்றப்பட வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வருவாய் துறையினருக்கு ஏற்பட்ட பணி சுமையை குறைக்க வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் 5 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் அவுட்சோர் சிங் நியமனத்தை கைவிட வேண்டும் ஜூலை ஒன்றாம் நாள் வருவாய்த்துறை நாளாக அறிவிக்க வேண்டும், மேலும் இப் போராட்டத்தில் தலையாரிகள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், நில அளவையர் சங்கம், அலுவலக உதவியாளர் முதல் வருவாய் வட்டாட்சியர் வரை கலந்து கொண்டு ஒரு நாள் தற்செயல் எடுத்து மாநிலம் தழுவுய தர்ணா போராட்டம் நடைபெற்றது. . இதன்பிறகு ராமநாதபுரம் பட்டணம் காத்தான் முதல் நிலை ஊராட்சி அலுவலகத்தில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் முருகைய்யா மற்றும் மாவட்ட செயலாளர் பழனிக்குமார் தலைமையில் ஏராளமான வருவாய்த் துறையினர் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story