தூத்துக்குடியில் கைப்பந்து போட்டி : தருவைகுளம் அணி வெற்றி!

X
தூத்துக்குடியில் நடைபெற்ற மூத்தோருக்கான கைப்பந்து போட்டியில் தருவைகுளம் செயின்ட் மைக்கேல் அணி கோப்பையை வென்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் யங் ஸ்பைக்கர்கள் கிளப் சார்பில் 35 வயதுக்கு மேற்பட்ட மூத்தோருக்கான கைப்பந்து போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 8 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் தருவைகுளம் செயின்ட் மைக்கேல் அணி - சிஎம்என் அணிகள் மோதின. இதில், தருவைகுளம் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கைப்பந்து கழகச் செயலாளர் ரமேஷ் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும் வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் ஸ்டாலின், ராஜ்குமார் மற்றும் கைப்பந்து கழகத்தினர் செய்திருந்தனர்.
Next Story

