தாந்தோணி மலை - சரக்கு வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு.

தாந்தோணி மலை - சரக்கு வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு.
தாந்தோணி மலை - சரக்கு வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் , தாந்தோணி மலை அருகே முத்தலாடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி செல்லம்மாள் வயது 60 .கூலி தொழிலாளி. இவர் ஜூன் 24ஆம் தேதி நள்ளிரவு 2 :15 மணி அளவில் தாந்தோணி மலை பகுதியில் உள்ள தனியார் ஸ்டுடியோ முன்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கத்தாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம் செல்லம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் , உடலில் பலத்த காயமடைந்த அவர்சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். சம்பவம் அறிந்த செல்லம்மாள் மகன் அண்ணாதுரை வயது 41 என்பவர் அளித்த புகாரில் , சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த செல்லம்மாள் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விபத்து ஏற்படுத்திய லோகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Next Story