பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் நேற்று (ஜூன்.24) இரவு மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் கலந்துகொண்டு திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து 1300 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story




