சின்ன முளையூரில் சிறப்பு கால் நடை முகாம்

சின்ன முளையூரில் சிறப்பு கால் நடை முகாம்
X
நத்தம் அருகே சின்ன முளையூரில் சிறப்பு கால் நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே முளையூர் ஊராட்சி சின்ன முளையூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சிங்கமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினைப் பரிசோதனை, மலட்டுத்தன்மை நீக்க சிறப்பு சிகிச்சை, குடற்புழு நீக்கம், நோய் மாதிரிகள் ஆய்வு, ஆண்மை நீக்கம் (காளை) செயற்கை முறை கருவூட்டல் பணி, கோழிக்கழிச்சல் தடுப்பூசி, வெறிநாய் தடுப்பூசி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசை அதை பராமரிக்கும் விவசாயிகளுக்கு வழங்கினர். முளையூர், சின்ன முளையூர், கட்டப்புலிபட்டி, எல்லைப்பாறை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story