பல்லடத்தில் திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி

பல்லடத்தில் திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி
X
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் போட்டி செல்வராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் செம்மொழி நாள் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியை, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பல்லடம் நகர தி.மு.க. துணைச் செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளார் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் ஒன்றிய செயலாளர் அசோகன், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் குமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பி.ஏ. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜசேகரன் வரவேற்றார். தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பல்லடம் மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாட உள்ளனர். முதல் பரிசு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை 2-வது பரிசு ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பை, 3-வது பரிசு ரூ 10 ஆயிரம் மற்றும் கோப்பை, 4-வது பரிசு 5 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் ரத்தினசாமி, சண்முகசுந்தரம், சவுந்தர்ராஜன், மலர்க் கொடி, கதிரேஸ் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story