அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

X
Pallipalayam King 24x7 |25 Jun 2025 5:51 PM ISTஅரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகத்தின் சார்பாக பள்ளிபாளையம் சித்தி விநாயகர் கோவில் அருகே 73 வது மாதாந்திர சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு திண்டுக்கல் சின்ராஜ் ஐயா அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார் . இந்த நிகழ்ச்சியில் நான்காம் ஆண்டாக பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, ஜாமென்ட்ரி பாக்ஸ் , வாட்டர் கேன் மற்றும் எழுது பொருள்கள் ஆகிய கல்வி உபகரணங்கள் சுமார் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜோதிடர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் பி.ஏ.முகுந்தன் முரளி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
Next Story
