விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு. சாலைமறியல்.

X
கடைமடை பகுதிக்கு முறையான தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் காங்கேயத்தில் இருந்து பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணை கண்காணிப்பு பொறியாளரை முற்றுகையிட விவசாயிகள் பாசன சங்க தோட்டத்தில் திரண்டு இருந்த நிலையில் போலீசார் தடை விதித்ததால் சாலை மறியலில் ஈடுபடுமுயன்றனர் தோட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளியே வர முடியாமல் போலீசார் கயிறுகள் மற்றும் தடுப்புகள் அமைத்து தடுத்தனர் இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனை தொடர்ந்து வேலிகளை அறுத்து சாலைக்கு வந்த விவசாயிகள் காங்கேயம் கரூர் சாலை பகவதி பாளையம் பிரிவு அருகே சாலையில் அமர்ந்து கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story

