பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர்!

X
வேலூர் மாவட்டத்தில் ரூபாய் 198 கோடி மதிப்பீட்டில் புரணமைக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட்டுள்ள பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு இன்று (ஜூன் 25) திறந்து வைத்தார்.முன்னதாக, ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையம் வந்தடைந்த அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

