ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம்..

Rasipuram King 24x7 |25 Jun 2025 9:04 PM ISTராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் புதன்கிழமை சர்வ அம்மாவாசையை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் மற்றும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால் தயிர் மஞ்சள் சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் தாமரை மேல் முத்துக்கள் பதித்த மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதே போல் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி உற்சவருக்கும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Next Story
