காலிப்பணியிடங்களை நிரப்ப  வலியுறுத்தி  வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா

காலிப்பணியிடங்களை நிரப்ப  வலியுறுத்தி  வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா
X
தர்ணா
- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு  புதன்கிழமை நடைபெற்றது.  இந்தப் போராட்டத்திற்கு உயர்மட்டக்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்து, துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பார்த்தசாரதி, விஜயபாஸ்கர், மாரிமுத்து, அர்ஜுனன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்டத் தலைவர்கள் செந்தில் குமார், விஜய பாஸ்கர், டேனியல் மார்க்ஸ், மாவட்டச் செயலாளர்கள் ரமேஷ், மாரிமுத்து,  மாநில துணை பொதுச்செயலாளர் ஜெபருல்லா, ரெங்கசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத்தில், "பொதுமக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக செய்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் நில அளவைத்துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும், வெளிமுகமை, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும், அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். நிறைவாக சரவணன் நன்றி கூறினார்.
Next Story