பூதலூர் வட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்க உறுதி : முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு 

பூதலூர் வட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்க உறுதி : முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு 
X
விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், செங்கிப்பட்டி சரகத்திற்குட்பட்ட வெண்டையம்பட்டி, கோட்டரப்பட்டி, மனையேறிப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீரன்கண்டியன்பட்டி உள்ளிட்ட 17 கிராம விவசாயிகளுக்கு 2024-2025 ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக இன்சூரன்ஸ் தொகை வழங்கிடவும், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரியும், நியாய விலைக்கடைகளில், பயோமெட்ரிக் கைரேகை பதிவிற்கான,  கைரேகை, கண்விழி படம் எடுக்கும் போது பதிவு செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது. இதனை மாற்றி எளிய முறையில் பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஜூன்.25 ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணியளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இது தொடர்பாக, ஜூன்.23 மாலை 4 மணியளவில் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், பூதலூர் வட்டாட்சியர் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி,  திரு. சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பாஸ்கர் மற்றும் விவசாயிகள், வேளான்மைத்துறை உதவி இயக்குநர், வேளாண் அலுவலர்கள், பூதலூர் காவல் ஆய்வாளர், பூதலூர் சரக வருவாய் ஆய்வாளர், செங்கிப்பட்டி சரசு வருவாப் ஆய்வாளர், வீரமரசன்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்,  பயிர் அறுவடை பரிசோதனை செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாய நிலம் குறித்த விபரத்தினை பூதலூர் வேளாண்மை அலுவலகத்திற்குச் சென்று, வேளாண்மை அலுவலரால் மேற்பட்ட குறைகள் தொடர்பாக சமர்ப்பிக்கும் ஆவணங்களை பரிசீலித்து கொள்வதாகவும், குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதாகவும், பயிர் நிவாரணம் தொடர்பாக அரசாணை வரப்பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நியாய விலைகடைகளில் பயோமெட்ரிக் ரேகை பதிவின் போது கைரேகை, கண்விழி படம் எடுக்கும் போது பதிவு செய்யமுடியாத நிலை பூதலூர் வட்டத்தில் பரவலாக ஏற்படுவது தொடர்பாக, மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் தெரிவித்து இக்குறைபாடுகள் களைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.   இதனைத் தொடர்ந்து, புதனன்று பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story