தஞ்சாவூரில் திருநங்கை, திருநம்பிகளுக்கு சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தஞ்சாவூரில் திருநங்கை, திருநம்பிகளுக்கு சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X
நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம்  தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம், மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு உதவிடும் வகையில் இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் துறைகளுடன் இணைந்து, அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை விடுபட்டவர்களுக்கு வழங்கிட இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 17 திருநங்கைகளுக்கான அடையாள அட்டையும், 10 நபர்களுக்கு ஆதார் அட்டை முகவரி மாற்றமும், 11 நபர்களுக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையும், 15 நபர்களுக்கு குடும்ப அட்டை NPHH அட்டையாக மாற்றப்பட்டு புதிய அட்டையும், மேலும் பாபநாசம் வட்டத்தைச் சார்ந்த 9 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இம்முகாமில் அடுக்குமாடி வீடு விண்ணப்பம்,  தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டி, மகளிர் திட்டம் மூலமாக புதிய மகளிர் சுய உதவி குழு அமைக்க விருப்பம், வாக்காளர் அடையாள அட்டை வேண்டி போன்ற பல்வேறு 88 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், இம்முகாமில் திருநங்கைகளுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது.  இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா எஸ்.விஜயன், வருவாய் கோட்டாட்சியர்கள் செ.இலக்கியா (தஞ்சாவூர்), திரு.எஸ்.சங்கர் (பட்டுக்கோட்டை), மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.டி.லதா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கா.பரமேஸ்வரி, பாபநாசம் வட்டாட்சியர் தா.பழனிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story