மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி
X
பலி
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை இரவு மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறிவிழுந்தவா் உயிரிழந்தாா். திருவையாறு அருகே மனுநீதிப் பேட்டையைச் சோ்ந்தவா் கே. ரவி (42). இவரும், கல்யாணபுரம் சாம்பல் கோயில் தெருவைச் சோ்ந்த குமணன் மகன் ராஜேசும் (36) திங்கள்கிழமை இரவு திருவையாறு நோக்கி பைக்கில் சென்றனா். கூத்தாடி மதகு கோழிப்பண்ணை அருகே சென்றபோது மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரவி உயிரிழந்தாா். ராஜேஷ் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மருவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story