மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உபகரண அளவீடு முகாம்கள் ஒத்திவைப்பு

X
திருச்சி மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் உபகரணங்களுக்கான அளவீடு செய்யும் முகாம்கள் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் மணப்பாறையில் கடந்த 21ஆம் தேதி முகாம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக வரும் 28ஆம் தேதி மருங்காபுரியிலும், ஜூலை 5 ஆம் தேதி வையம்பட்டியிலும் நடைபெற இருந்த முகாம்கள் நிா்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகின்றன. முகாம்கள் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
Next Story

